‘கேஜிஎஃப்’ இயக்குநரின் ‘கனவுத் திட்டம்’ - போஸ்டரில் ஈர்க்கும் ஜூனியர் என்டிஆர்!

By செய்திப்பிரிவு

ஜூனியர் என்டிஆருடன் பிரசாந்த் நீல் இணையும் புதிய படத்தின் போஸ்டர், ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளையொட்டி இன்று வெளியாகியுள்ளது.

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குநர் கொரோடலா சிவாவுடன் கைகோக்கிறார். கொரட்டலா சிவா- ஜூனியர் என்டிஆர் இணையும் 'என்டிஆர் 30' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். ஜூனியர் என்டிஆரின் மிரட்டும் கெட்டப்பில் ’என்டிஆர்30’ படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது படக்குழு.

ரத்னவேலு, சாபு சிரில், ஸ்ரீகர் பிரசாத் எனப் பல பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இது ஜூனியர் என்டிஆரின் 30-வது படம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், 'கேஜிஎஃப்' படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் கைகோக்கிறார். இந்தப் படத்திற்கு 'என்டிஆர்31' என அடைமொழியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்டர், ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளையொட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் (Mythri Movie Makers & NTR Arts) இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 2023-ல் துவங்குகிறது.

இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல், "இது 20 ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் தோன்றிய ஒரு யோசனை, ஆனால் படத்தின் பரிமாணம் மற்றும் பிரமாண்டம் என்னைத் தடுத்து நிறுத்தியது. இறுதியாக எனது கனவுத் திட்டத்தை எனது கனவு நாயகனுடன் உருவாக்குவதற்கான களம் இன்று அமைந்துள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்