பெங்களூரு: 'Fat-Free' பிளாஸ்டிக் சர்ஜரி (அறுவை சிகிச்சை) செய்து கொண்ட 21 வயதான கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்துள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்ததாக தகவல்.
பெங்களூருவில் உள்ள அபிகெரே (Abbigere) பகுதியில் வசித்து வந்தவர் சேத்தனா ராஜ். சின்னத்திரை நடிகையான அவர் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். 21 வயதான அவர் பெங்களூருவின் ராஜாஜி நகரில் இயங்கி வரும் ஷெட்டி காஸ்மெட்டிக் மையத்தில் 'Fat-Free' பிளாஸ்டிக் சர்ஜரிக்காக நேற்று காலை (மே 16) அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர் அங்கிருந்த மருத்துவர்கள்.
இருப்பினும் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இருந்தும் அவரை அருகே இருந்த வேறொரு மருத்துவமனைக்கு ஷெட்டி காஸ்மெட்டிக் மைய மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் போலீஸில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். அத்துடன் அவர் உயிரிழந்த தகவலையும் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை குறித்து நடிகை சேத்தனா, தனது பெற்றோர்களிடம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இது மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் ஏற்பட்ட மரணம் எனத் தெரிவித்துள்ளனர் மகளை இழந்து வாடும் சேத்தனாவின் பெற்றோர்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago