மே 20-ம் தேதி 'ஆச்சார்யா' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படங்கள் வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன.
தெலுங்கின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த திரைப்படம் 'ஆச்சார்யா' இந்த படம் கடந்த மாதம் 29-ம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படம் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. 140 கோடியில் தயாரிக்கப்பட்டு வெறும் 75 கோடி ரூபாய்தான் வசூல் செய்தது.இந்த நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்கு பிறகான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியிருந்தது. அதன்படி , படம் வெளியாகி 20 நாட்கள் கழித்து வரும் மே 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.
இதேபோல, ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்தியா படமாக கடந்த மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது 'ஆர்ஆர்ஆர்'. உலகம் முழுவதும் 1000 கோடிரூபாய்க்கு அதிகமான வசூலை குவித்து படம் சாதனை படைத்துள்ளது. படம் வெளியாகி 50 நாளைக் கடந்த நிலையில்,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ஜீ5 தளத்தில் மே 20, 2022 அன்று பிரத்யேகமாக வெளியிடப்படும் என ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago