நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான ’கேஜிஎஃப் 2 ’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான பான் இந்தியா படம் 'கேஜிஎஃப் 2'. இதில், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
'கேஜிஎஃப் 2' படம் இந்திய அளவிலும், உலக அளவிலும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்த இந்தப் படம், வெளியான 2 வாரங்களில் உலக அளவில் 1,000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனைப் படைத்து வருகிறது.
இந்தியாவில் ரூ.1,000 கோடிக்கு வசூலித்த நான்காவது திரைப்படம் என்ற சாதனையை ’கேஜிஎஃப் 2’ புரிந்துள்ளது.
இதற்கு முன்னர் டங்கல், பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago