துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'சீதா ராமம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான், நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் அவர் ராணுவ அதிகாரியாக, ராம் என்ற கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். இதில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா காஷ்மீரைச் சேர்ந்த ஆஃப்ரீன் என்ற பெண்ணாக நடிக்கிறார். வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தத் இந்தப் படத்தை தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 45 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் ராஷ்மிகா ஹிஜாப் அணிந்துகொண்டு தொழுதுகொண்டிருக்கிறார். 'ஒரு வீரனுடைய இதயத்தில எதிரி ஏத்தி வைச்ச போர் இது ஆஃப்ரின். இந்த போர்ல சீதையையும், ராமனையும் நீ தான் ஜெயிக்க வைக்ககணும்'' என பின்னணி குரல ஒலிக்கிறது. வீடியோவில் துல்கரின் க்யூட் ரியாக்சன் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யபட்டு வருகிறது. தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்தின் பெயருக்குக் கீழ் 'போரூற்றி எழுதிய காதல் கதை' என்ற டேக்லைனும் சேர்க்கப்பட்டுள்ளது.
வீடியோவைக்காண இங்கே க்ளிக் செய்யவும்:
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago