'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட குறைவான காட்சிகளால், படக்குழு மீது பாலிவுட் நடிகை அலியா பட் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபல இளம் நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜ் மற்றும் ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கடந்த 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் உலகமெங்கும் வெளியானது. கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடி வருகிறது.
ரூ.400 கோடி தயாரிப்பில் உருவான இப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால், படக்குழு மகிழ்ச்சியில் இருந்து வரும் வேளையில், படத்தின் நாயகிகளில் ஒருவரான அலியா பட் சோகத்தில் இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அலியா பட்டை பொறுத்தவரை, தென்னிந்திய திரையுலகில் 'ஆர்ஆர்ஆர்' முதல் படம். ஆனால், இதில் அவர் எதிர்பாராத்ததுபோல் பெரிய கதாபாத்திரம் இல்லை. படத்தில் மொத்தமே ஏழு சீன்கள் அளவுக்கே அவருக்கு காட்சிகள். அதிலும், ஒரு காட்சியில் மட்டுமே பெரிய டயலாக் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த அதிருப்தியில் தற்போது அலியா இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிருப்தியின் காரணமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜமௌலியை அலியா பட் அன்ஃபாலோ செய்துள்ள அலியா, 'ஆர்ஆர்ஆர்' மற்றும் ராஜமௌலி தொடர்பான புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.
» தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
» பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி - தொடங்கியது படப்பிடிப்பு
ராஜமௌலி படங்களை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கும். 'மகதீரா', 'நான்ஈ', 'பாகுபலி' எனப் பல படங்கள் அதற்கு உதாரணம். பாகுபலி படத்தில் தமன்னா, அனுஸ்கா என ஒவ்வொருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தில் அலியா மொத்தமே ஏழு சீன்கள் மட்டுமே வந்துச் சென்றார். அதேநேரம், ஒலிவியா மோரிஸ்க்கு நிறைய காட்சிகள் இருந்ததுடன், அவரின் பாத்திரமும் ரசிக்கும்படியாக இருந்தது. இந்த அதிருப்தியில் அலியா பட் இப்போது ராஜமௌலியை அன்ஃபாலோ செய்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago