‘டியர் பாதர்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார் பிரகாஷ்ராஜ்.
இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமன்றி இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்.
தற்போது ‘டியர் பாதர்’ என்ற குஜராத்தி மொழி படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவரே இயக்கி நடிக்கவுள்ளாரா அல்லது தயாரித்து நடிக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும்.
குஜராத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘டியர் பாதர்’ என்ற நாடகத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. உமாங் வயாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தினை ரத்தன் ஜெயன் மற்றும் கணேஷ் ஜெயன் இணைந்து தயாரித்துள்ளார்கள். இதில் பரேஸ் ராவல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago