பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

‘ராதே ஷ்யாம்’, ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இதில் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மார்ச் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதர படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது ‘ஆதிபுருஷ்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. 2023-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராமாயணத்தை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் ஓம் ராவத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

35 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்