ராஷ்மிகாவுடன் திருமணமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா

By செய்திப்பிரிவு

ராஷ்மிகாவுடன் திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு விஜய் தேவரகொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘சாமி சாமி’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

ராஷ்மிகா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து ‘கீத கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இப்படங்கள் வெளியான சமயத்திலிருந்தே இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். ராஷ்மிகாவின் திருமணம் நின்றதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.

கடந்த சில நாட்களாக ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா தொடர்பான செய்திகள் மீண்டும் தலைதூக்கி வருகின்றன. விரைவில் இருவரும் தங்கள் திருமண தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், இதுபோன்ற செய்திகளுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் இதுபோன்ற செய்திகள் வழக்கம்போல முட்டாள்தனமானவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்