‘பீம்லா நாயக்’ படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கான ‘பீம்லா நாயக்’ படத்தை சித்தாரா எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா ஆகியோர் நடித்துள்ளனர். சாகர் கே.சந்திரா இயக்கியுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
முதலில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் பின்னர் கரோனா அச்சுறுத்தலா தள்ளிவைக்கப்பட்டு தற்போது வரும் பிப்.25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த மத்திய தணிக்கை வாரியம் இப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
» தீர்ந்தது 'கள்ளன்' படத் தலைப்பு பிரச்சினை
» பட்ஜெட்டால் அலறிய நிறுவனங்கள்... கனவுப் படத்தை சொந்த ரிஸ்கில் எடுக்கும் ‘தி காட்ஃபாதர்’ இயக்குநர்!
‘பீம்லா நாயக்’ படத்தின் ட்ரெய்லர் வரும் பிப். 21 அன்று இணையத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#BheemlaNayak censor formalities are done & certified with U/A
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago