தியேட்டர்களில் வரவேற்பில்லை: இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு செல்லும் ’குட்லக் சகி’

By செய்திப்பிரிவு

கீர்த்தி சுரேஷ் நடித்த 'குட்லக் சகி' படம் திரையரங்குகளில் வெளியான 15 நாட்களில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் 'குட்லக் சகி'. ஆதி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சுதிர் சந்திர பத்ரி தயாரித்துள்ளார். தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் டிசம்பர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு, ஒருவழியாக கடந்த ஜனவரி 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஆனால், இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியைத் தழுவியது. கீர்த்தி சுரேஷின் நடிப்பு, திரைக்கதை, பாடல்கள் என எதுவும் இப்படத்தை காப்பாற்றவில்லை. சமூக வலைதளங்களிலும் இப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்தச் சூழலில் 'குட்லக் சகி' படம் வெளியான 15 நாட்களில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. அதன்படி இப்படம் வரும் பிப். 12 அன்று அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்