சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருப்பேன் - மனம் திறந்த நாக சைதன்யா

By செய்திப்பிரிவு

சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நாக சைதன்யா கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யா - சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே பல்வேறு திரையுலக பிரபலங்கள் பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்தன. இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிரிந்திருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருப்பேன். எனவே இது போன்ற ஒரு சூழலில் விவாகரத்துதான் சிறந்த முடிவு.

இவ்வாறு நாக் சைதன்யா கூறியுள்ளார்.

நாக சைதன்யா பேசியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாக சைதன்யா மற்றும் அவரது தந்தை நாகர்ஜுனா இணைந்து நடித்துள்ள ‘பங்கர்ராஜு’ திரைப்படம் நாளை (ஜன 14) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்