நடிகர் மகேஷ் பாபுவுக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. புதன் மாலை நிலவரப்படி மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3-வது அலை தொடங்கிவிட்டதால், மக்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகர் அருண் விஜய், மீனா, உள்ளிட்டோர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னணி தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும் எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் உடனடியாக போட்டுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு மகேஷ்பாபு கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்