பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ராதே ஷ்யாம்'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது.
தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பொங்கலுக்கு வெளியாகவிருந்த ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராதே ஷ்யாம் படமும் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை என்று திரையுலக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது குறித்து படக்குழு இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
ராதே ஷ்யாம்' இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் “காலங்கள் கடினமாக இருக்கின்றன, இதயங்கள் பலவீனமாக இருக்கின்றன, மனங்கள் குழப்பத்தில் உள்ளன - வாழ்க்கை நம்மை நோக்கி எதை வீசினாலும் நமது நம்பிக்கை எப்போதும் உயர்வானதாகவே இருக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
அவரது ட்வீட் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago