‘விக்ராந்த் ரோணா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கிச்சா சுதீப் நடித்துள்ள ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ராந்த் ரோணா’. அனூப் பண்டாரி இயக்கியுள்ள இப்படத்தில் நிரூப் பண்டாரி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்தை ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் 3டியில் வெளியாகிறது.

தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுகுறித்து இயக்குநர் அனூப் பண்டாரி கூறும்போது, “ ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரம்மாண்ட உருவாக்கமும் 3டி தொழில்நுட்பமும், வெள்ளித்திரையில் பார்க்க வேண்டிய முக்கிய அம்சமாகும். இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் கவரும் அட்டகாசமான விருந்தாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்