யூடியூபில் சாதனை படைத்த ‘ஆர்ஆர்ஆர்’ பாடல்

By செய்திப்பிரிவு

‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன.

படத்தின் பாடல்களைப் படக்குழு ஒவ்வொன்றாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலையும், ‘ஜனனி’ என்ற பாடலையும் யூடியூபில் படக்குழு வெளியிட்டது.

இதில் ‘நாட்டு நாட்டு’ பாடலில் இடம்பெற்ற ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடனம் பெரும் வைரலானது. இப்பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என வெளியான அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் பாடல் அனைத்து மொழிகளிலும் ஒட்டுமொத்தமாக 75 மில்லியன் பார்வைகளைப் பெற்று யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்