பவன் கல்யாணுடன் இணைந்து பணியாற்றாதது ஏன்? - இயக்குநர் ராஜமௌலி விளக்கம்

By செய்திப்பிரிவு

நடிகர் பவன் கல்யாணுடன் பணியாற்றாதது குறித்து இயக்குநர் ராஜமௌலி விளக்கம் அளித்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி 7-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்துக்காக தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்த ராஜமௌலி பலவேறு விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் நடிகர் பவன் கல்யாணுடன் பணியாற்றாதது ஏன் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:

''எனக்கு பவன் கல்யாணை மிகவும் பிடிக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் பவன் கல்யாணுக்காக ஒரு கதையை எழுத மிகவும் முயற்சி செய்தேன். அவரை வைத்துப் படம் இயக்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. நாங்கள் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து சிறிய உரையாடல் ஒன்று கூட எங்களுக்கிடையே நடந்தது. அதன் பின்னர், நான் என்னுடைய மாஸ் மசாலா வட்டத்திலிருந்து வெளியே வந்து படம் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். பவனும் அரசியலில் பிஸியாகி விட்டார். இப்படியாக எங்கள் பாதைகள் பிரிந்துவிட்டன''.

இவ்வாறு ராஜமௌலி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்