புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். 'பவர் ஸ்டார்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இன்று (அக்டோபர் 29) காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு கன்னடத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அவற்றின் தொகுப்பு:
» புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்: கன்னடத் திரையுலகினர் அதிர்ச்சி
» ரஜினி இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்: சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனை விளக்கம்
சிரஞ்சீவி: அதிர்ச்சியாக, கடுமையாக, இதயத்தை நொறுக்கும் செய்தி. புனித் ராஜ்குமார் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுச் சென்றுவிட்டார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்துக்குக் கண்ணீருடன் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கன்னட, இந்தியத் திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. இந்த இழப்பைச் சமாளிக்கும் பலம் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
மோகன்லால்: புனித் ராஜ்குமாரின் இழப்பு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. நான் ஒரு இளைய சகோதரனை இழந்துவிட்டதைப் போல உணர்கிறேன். எனக்கு நெருக்கமான உறவு இருக்கும் அவரது குடும்பத்துக்கு என் ஆறுதல்கள், பிரார்த்தனைகள். இந்த இழப்பைச் சமாளிக்கும் பலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டுகிறேன்.
மோகன் பாபு: புனித்தின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவ்வளவு இளமையான, பணிவான குழந்தை. கடவுளின் வழிமுறைகள் சில நேரங்களில் எனக்குப் புரிவதில்லை. ஒட்டுமொத்த திரைத்துறைக்குச் சோகமான நாள். அவரது குடும்பத்துக்கு வலிமை கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
மகேஷ் பாபு: புனித் ராஜ்குமாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு, அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைகிறேன். நான் சந்தித்துப் பேசிய மிகப் பணிவான மனிதர்களில் ஒருவர். அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபங்கள்.
மம்மூட்டி: புனித் மறைந்துவிட்டார் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன், மனமுடைந்து போனேன். திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. புனித்தின் குடும்பத்துக்கும், அன்பார்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
ஜூனியர் என்.டி.ஆர்: இதயம் நொறுங்கிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் சென்றுவிட்டீர்கள் என்பதை நம்ப முடியவில்லை.
அபிஷேக் பச்சன்: இதயத்தை நொறுக்கும் செய்தி. இவ்வளவு சீக்கிரம் விட்டுப் பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் என் அனுதாபங்கள். நீங்கள் இல்லாத குறையை உணர்வோம்.
ரகுல் ப்ரீத் சிங்: இது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. என் நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரது குடும்பத்துக்கு என் ஆறுதல்கள், ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஸ்ரேயா கோஷல்: இது உண்மையாக இருக்க முடியாது. இதைக் கேட்டு நொறுங்கிப் போயிருக்கிறேன். புனித் ராஜ்குமார் பணிவான சூப்பர் ஸ்டார், இளமையானவர். வாழ்க்கையில் உச்சம் தொட்டிருக்கும்போது சுலபமாக இந்த உலகை நீங்கிச் சென்றுவிட்டார். அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்,
ராம் சரண்: என் இனிய சகோதரர் புனித் ராஜ்குமார், மிகவும் அன்பான மனிதர்களில் ஒருவர். தனது தந்தை, மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மரபைத் தனது நடிப்பின் மூலம் மட்டுமல்லாது தனது கனிவின் மூலமும் வெற்றிகரமாக முன்னே எடுத்துச் சென்றார். அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் இழப்பை உணர்வோம்.
போனி கபூர்: புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்துக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். ஆற்றல் மிக்க நடிகர். தனது அற்புதமான நடிப்பின் மூலம் மக்களின் மனங்களை வென்றவர். அவரது குடும்பத்துக்கு அனுதாபங்கள்.
மாதவன்: மிகவும் கனிவான, அன்பான, நல்ல ஆன்மாக்களில் ஒருவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார். நான் என்ன உணர்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை. மிகவும் நொறுங்கிப் போயிருக்கிறேன். எங்கள் இதயத்தை உடைத்து, குழப்பமடைய வைத்துவிட்டீர்கள் சகோதரா. சொர்க்கம் இன்று பிரகாசமாக இருக்கும். ஆனால், இன்னும் இது உண்மையாக இருக்காது என்று நான் நம்புகிறேன்.
இமான்: பணிவான ஒரு மனிதர் நம்மிடையே இனி இல்லை. வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்ற, ஊகிக்க முடியாத தன்மை கொண்டது. இவரோடு 'நடசார்வபோவ்மா' திரைப்படத்தில் பணியாற்றினேன். அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் புனித்.
சோனு சூட்: மனமுடைந்து போயிருக்கிறேன். உங்கள் இழப்பை என்றும் உணர்வேன் சகோதரா.
வெங்கட் பிரபு: நம்ப முடியவில்லை.
ராம் கோபால் வர்மா: புனித் ராஜ்குமாரின் மரணம் அதிர்ச்சியடைய வைக்கும் சோகம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாம் எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம் என்கிற நம் கண்ணைத் திறக்கும் உண்மை பயமுறுத்துகிறது. நான் உயிரோடு இருக்கும் வரை வாழ்க்கையை வேகப்படுத்தி வாழ்வதே சிறந்தது என்று நினைக்கிறேன்.
விக்ரம் பிரபு: புனித் அண்ணா, மனமுடைந்துள்ளேன். குழப்பமாக இருக்கிறது. நான் சந்தித்ததில் மிக இனிமையான, தூய்மையான ஆன்மா. பாராட்ட என்றுமே தயங்கியதில்லை. என்றுமே உற்சாகமாக, நேர்மறையாக இருந்தவர். இதை என்னால் புரிந்துகொள்ள, தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்களுடனான உரையாடல் இனி இல்லை என்கிற இழப்பை உணர்வேன் அண்ணா.
விவேக் ஓபராய்: இந்தக் கொடூரமான செய்தியைக் கேட்டது அதிர்ச்சியாக, இதயத்தை ஆழமாக பாதிக்கும் விஷயமாக இருக்கிறது. உங்கள் இழப்பை உணர்வோம் அன்பார்ந்த அப்பு. எங்கள் இதயத்தில் நீங்கள் என்றும் வாழ்வீர்கள். இந்த ஆழமான வலியிலிருந்து மீண்டுவர அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள், பிரார்த்தனைகள்.
ஐஸ்வர்யா ராஜேஷ்: புனித் ராஜ்குமாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்திருக்கிறேன். இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் வலிமை கிடைக்க எனது பிரார்த்தனைகள்.
ஜீவா: அதிர்ச்சியாக இருக்கிறது, நம்ப முடியவில்லை. வாழ்க்கையைக் கணிக்க முடியாது. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.
சித்தார்த்: என்னால் இதைக் கிரகிக்க முடியவில்லை. நீங்கள் எங்களை விட்டுச் சென்றுவிட்டீர்கள் என்பதை நம்ப முடியவில்லை புனித். அன்பான, திறமையான, துணிச்சலான ஒருவர். இன்னும் உலகத்துக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய பங்கு நிறைய இருந்தது. இது நியாயமில்லை சகோதரா. மனமுடைந்து போயிருக்கிறேன்.
பிரித்விராஜ்: இது மிகுந்த வலியைத் தருகிறது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சூப்பர் ஸ்டார். இந்த சோகத்தைக் கடந்து வரும் வலிமை அவரது குடும்பம், நண்பர்கள், லட்சக்கணக்கான ரசிகர்களுக்குக் கிடைக்கட்டும்.
லட்சுமி மஞ்சு: கடவுளே!!! இல்லை.. இது உண்மையாக இருக்க முடியாது? எப்படி சாத்தியம்? அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். விரைவாகப் பிரிந்துவிட்டீர்கள்.
துல்கர் சல்மான்: மிகவும் கனிவான, அன்பான நடிகர், மனிதர். புனித் குடும்பம், நண்பர்கள் மற்றும் அலைகடலென இருக்கும் அவரது ரசிகர்களுக்கு, இந்த ஈடில்லாத இழப்பைச் சமாளிக்கும் வலிமையைத் தர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
சேரன்: கன்னட உலகில் தனக்கெனப் பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தவர். நல்ல மனிதர் என நிறையப் பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.. சிறுவயதில் நடக்கக் கூடாத நிகழ்வு. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்...
ஹன்சிகா: என்னால் இதைக் கிரகிக்க முடியவில்லை. உணர்ச்சிகரமான, அன்பான, பணிவான ஒரு மனிதர். இது மிகப்பெரிய துயரம். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
பூஜா ஹெக்டே: நான் கேள்விப்படும் விஷயத்தை நம்ப முடியவில்லை. வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றது. இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. இந்தக் கடினமான காலகட்டத்தில் அவரது குடும்பத்துக்கும், அன்பார்ந்தவர்களுக்கும் எனது அன்பை, ஆதரவைத் தருகிறேன். ஆன்மா சாந்தியடையட்டும் புனித் ராஜ்குமார்.
குஷ்பு: அப்பு, எங்களை இப்படி நொறுக்கிவிட்டு நீ செல்லக்கூடாது. எனக்குத் தெரிந்த மாணிக்கங்களில் ஒருவன் நீ. இந்தச் செய்தியை என்னால் ஏற்க முடியவில்லை. போகாதே அப்பு. திரும்பி வா. தயவுசெய்து திரும்பி வா. உன் ஆன்மா சாந்தியடையட்டும் புனித் ராஜ்குமார்.
தமன்: வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்று. சில இழப்புகளை ஏற்கவே முடியாது. இல்லை, இல்லை, இல்லை. கடவுளே, நீ இவ்வளவு இரக்கமற்று இருக்கக் கூடாது. நல்ல மனம் படைத்தவர்களை நீ எடுத்துக்கொள்ளக் கூடாது. எனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. புனித் அண்ணா!!!
பிரகாஷ்ராஜ்: ஆ... இல்லை.. இவ்வளவு சீக்கிரம் சென்றுவிட்டாயே என் இனிய அப்பு. நான் நொறுங்கிவிட்டேன், இதயம் உடைந்துவிட்டது. இது நியாயமல்ல. கறுப்பு வெள்ளி இது.
ராதிகா: சில சமயங்களில் தருணத்தை இழக்கும் வரை அதை நாம் மதிப்பதில்லை. கன்னடத் திரையுலகத்தால் இந்த இழப்பைக் கிரகித்துக் கொள்ளவே முடியாது.
ஆர்யா: மிகவும் மனமுடையும்படியான செய்தி இது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் புனித் ராஜ்குமார்.
தமன்னா: அதிர்ச்சி, வருத்தம், வார்த்தைகளை இழந்து நிற்கிறேன்.
நிவின் பாலி: இதைக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் புனித். குடும்பம், நண்பர்கள், ரசிகர்களுக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago