கை ரேகை நிபுணராக பிரபாஸ்

By செய்திப்பிரிவு

'ராதே ஷ்யாம்' படத்தில் கை ரேகை நிபுணராக நடித்துள்ளார் பிரபாஸ்.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

நேற்று (அக்டோபர் 23) பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு 'ராதே ஷ்யாம்' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. கடுமையான விமர்சனங்களை இந்தப் படத்தின் டீஸர் எதிர்கொண்டு வருகிறது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் 'ராதே ஷ்யாம்' டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டீஸர் வெளியீட்டை முன்னிட்டு, 'ராதே ஷ்யாம்' படத்தின் சில தகவல்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக நடித்துள்ளார் பிரபாஸ். அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு காதல் கதையில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில் ட்ரெய்லர், பாடல்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு, 'ராதே ஷ்யாம்' படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்