பெண்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு: மன்னிப்புக் கோரினார் பாலகிருஷ்ணா

'சாவித்ரி' இசை வெளியீட்டு விழாவில் பெண்கள் குறித்த சர்ச்சைக் கருத்திற்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார் நடிகர் பாலகிருஷ்ணா.

சமீபத்தில் நடைபெற்ற 'சாவித்ரி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டு இசை வெளியிட்டார். அவ்விழாவில் "என் படத்தில் ரசிகர்கள் நாயகிகள் சும்மா வந்து போவதை விரும்பவில்லை. நான் அவர்களை முத்தமிட விரும்புகிறார்கள்" என்று பேசினார். அவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உள்ளாக்கியது.

பாலகிருஷ்ணாவின் பேச்சு ஆந்திராவில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. பல்வேறு வழக்குகள் அவர் மீது பதியப்பட்டு இருக்கிறது. மேலும், பல்வேறு பெண்கள் அமைப்புகள் பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் பாலகிருஷ்ணா என்பதால் எதிர்க்கட்சிகளும் இப்பிரச்சினையை கையில் எடுத்தது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனது கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தியிருக்கும் எனில் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

அவருடைய கருத்துக்கள் வேடிக்கையாக சொல்லப்பட்டவை தான். யாரையும் குறி வைத்து சொல்லப்பட்டவை அல்ல. பெண்களை மதிக்கும் குணத்தை தனது தந்தை என்.டி.ராமாராவிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளாதாக பாலகிருஷ்ணா கூறுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE