'அண்ணாத்த' தெலுங்குப் பதிப்பின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

ரஜினி நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் தெலுங்குப் பதிப்பிற்கான தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இதற்கான டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை ஜெகபதி பாபு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது 'அண்ணாத்த' படத்தின் தெலுங்குப் பதிப்பின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 'பெத்தண்ணா' எனத் தலைப்பிட்டுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நவம்பர் 4-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

நேற்று (அக்டோபர் 14) 'அண்ணாத்த' டீஸர் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே வேளையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்பாகப் படக்குழுவினரைப் பலரும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்