சிரஞ்சீவி நடித்து வரும் 'காட்பாதர்' படத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸைப் பாட வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது படக்குழு.
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றி, பணிகள் தொடங்கப்பட்டன.
மோகன் ராஜா இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'காட்பாதர்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் சிரஞ்சீவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை ராம்சரண் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருகிறார். இதன் பாடல் பதிவுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் சிரஞ்சீவி பற்றிய ஒரு பாடலைப் பாடவைக்க உலக அளவில் பிரபல பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸைத் தொடர்பு கொண்டுள்ளது படக்குழு.
மேலும், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கானையும் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு டிசம்பரில் தேதிகள் ஒதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரிட்னி ஸ்பியர்ஸ், சல்மான்கான் தொடர்பான செய்திகளை இன்னும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago