சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள 'ஆச்சாரியா' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், சோனு சூட், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆச்சாரியா'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தி வருகிறது.
இந்தப் படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. முதலில் பொங்கல் வெளியீடாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ஜனவரி 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் 'ஆச்சாரியா' வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியானது.
தற்போது 'ஆச்சாரியா' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.
» ஆர்.பால்கி - துல்கர் சல்மான் இணையும் சுப்: ரிவென்ஜ் ஆஃப் தி ஆர்டிஸ்ட்
» பிறந்த நாள் அன்று காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago