பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படத்தில் சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமான மைக் டைசன் நடிக்கிறார்.
கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் படம் 'லைகர்'. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். தற்காப்புக் கலை, சண்டைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.
ஞாயிற்றுக்கிழமை அன்று, நாளை மிகப்பெரிய அறிவிப்பு காத்திருக்கிறது என்று படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். தற்போது மைக் டைசன் படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
இந்திய சினிமாவில் முதல் முறையாக நடிக்கும் மைக் டைசனுக்கு, இந்தப் படத்தில் கவுரவ வேடம் என்றும், படத்தின் இறுதிக் கட்டத்தில் அவரது கதாபாத்திரத்தை வைத்தே முக்கியமான திருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கோவாவில் நடக்கும் படப்பிடிப்பில் மைக் டைசன் கலந்துகொள்கிறார்.
» பவர் இல்லாத எனக்கு ஏன் பவர் ஸ்டார் பட்டம்? - பவன் கல்யாண்
» சென்னையில் நாகேஷ் பெயரில் சாலை: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்
"முதல் முறையாக, குத்துச்சண்டை மேடையின் ராஜா இந்திய சினிமாவின் பெரிய திரைகளில் தோன்றவுள்ளார். மைக் டைசனை லைகர் குழுவுக்கு வரவேற்கிறேன்" என்று கரண் ஜோஹர் ட்வீட் செய்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா, "ஆச்சரியப்படுத்துவோம் என்று உறுதியளித்திருந்தோம். இப்போதுதான் அதைத் தொடங்கியிருக்கிறோம். இந்தியத் திரைகளில் முதன் முறையாக, எங்கள் பிரம்மாண்டமான லைகர் குழுவில், இந்த உலகின் மோசமான மனிதன், குத்துச்சண்டையின் கடவுள், சகாப்தம், மிகச்சிறந்த, இரும்பு மனிதர் மைக் டைசன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago