சமந்தா தொடர்பான கேள்விகளைத் தனது படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் நாக சைதன்யா தவிர்த்துள்ளார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லவ் ஸ்டோரி'. இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பாக 'லவ் ஸ்டோரி' படம் தொடர்பாக நாக சைதன்யா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது படம் தொடர்பான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமந்தா தொடர்பான எந்தவொரு கேள்வியையும் கேட்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்தவர்களுக்கு மட்டுமே, நாக சைதன்யா பேட்டியளித்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கங்களின் பெயரிலிருந்து அக்கினேனி என்ற வார்த்தையை சமந்தா நீக்கிவிட்டார். அப்போதிலிருந்தே நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இருவருமே இது தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
தற்போது நாக சைதன்யா - சமந்தாவைச் சேர்த்துவைக்க இருவரின் குடும்பத்தினரும் முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago