மோகன்லால் நடிக்கவுள்ள புதிய படத்தினை ஷாஜி கைலாஷ் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஒரே சமயத்தில் பல்வேறு படங்களைத் திட்டமிட்டு முடித்து வருபவர் மோகன்லால். தற்போது அவருடைய நடிப்பில் 'மராக்கர்', 'ஆராட்டு' ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன. மேலும், 'பரோஸ்', 'ப்ரோம் டாடி' மற்றும் '12த் மேன்' ஆகிய படங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் தான் 'ப்ரோ டாடி' படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார் மோகன்லால்.
இதனிடையே தனது புதிய படத்தை அறிவித்துள்ளார் மோகன்லால். இதனை முன்னணி இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கவுள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் - ஷாஜி கைலாஷ் கூட்டணி இணைகிறது. ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தினை தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் கதையை ராஜேஷ் ஜெயராம் எழுதியுள்ளார்.
மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் பல்வேறு ஆக்ஷன் படங்களை இயக்கியவர் ஷாஜி கைலாஷ். விஜயகாந்த் நடித்த 'வாஞ்சிநாதன்', அஜித் நடித்த 'ஜனா' உள்ளிட்ட பல படங்களை இயக்கியது இவரே. தற்போது மோகன்லாலுடன் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
» 'பாட்டு' ஒத்திவைப்பு: புதிய படத்தைத் தொடங்கினார் அல்போன்ஸ் புத்திரன்
» பாடல் காட்சிகள் லீக்: 'திருச்சிற்றம்பலம்' படக்குழுவினர் அதிர்ச்சி
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago