'உங்களில் யார் கோடீஸ்வரன்' நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜூனியர் என்.டி.ஆர்

By செய்திப்பிரிவு

'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியின் தெலுங்கு பதிப்பான 'உங்களில் யார் கோடீஸ்வரன்' நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்குகிறார். இந்த் நிகழ்ச்சி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் அடிப்படையில் உருவான நிகழ்ச்சி 'கவுன் பனேகா க்ரோர்பதி'. தமிழிலும் 'கோடீஸ்வரன்' என்கிற பெயரில் ஒளிபரப்பானது. இந்தி பதிப்பில் நடுவில் சில சீசன்களைத் தவிர இன்று வரை நடிகர் அமிதாப் பச்சனே தொகுப்பாளராக இருந்து வருகிறார். 2000ஆம் ஆண்டு ஒளிபரப்பை ஆரம்பித்த இந்தி பதிப்பு 21 வருடங்கள் கடந்து தற்போது 13-வது சீஸனில் இருக்கிறது

மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தி அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் அது தொடரவில்லை.

தற்போது தெலுங்கில் மீண்டும் இந்த நிகழ்ச்சி உருவாகியுள்ளது. இம்முறை பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இதைத் தொகுத்து வழங்குகிறார்.

முதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்து வரும் ராம் சரண் தேஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின் டீஸர் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து ராம் சரண் தேஜாவும் மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது.

இன்னொரு பக்கம் 'ஆர் ஆர் ஆர்' படத்தின் கடைசி கட்ட வேலைகளை இயக்குநர் ராஜமௌலி மும்முரமாக முடித்து வருகிறார். படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்