பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள புதிய படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. கரோனா அச்சுறுத்தலால் தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் பாலகிருஷ்ணா.
இந்தப் படத்தினை கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார். இவர் சமீபத்தில் ரவிதேஜா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'க்ராக்' படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலகிருஷ்ணா - கோபிசந்த் மாலினேனி இணையும் படத்தின் இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருகிறார்.
இது பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் 107-வது படமாகும். இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க முடிவு செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago