மின்சாரம் தாக்கி பலியான சண்டைப் பயிற்சியாளர்: இயக்குநர், தயாரிப்பாளரிடம் காவல்துறை விசாரணை

By செய்திப்பிரிவு

கன்னடத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் சண்டைப் பயிற்சியாளர் விவேக் என்பவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

'லவ் யூ ரச்சு' என்கிற திரைப்படத்துக்கான சண்டைக் காட்சி படப்பிடிப்பு கர்நாடகாவின் ஜொகெனஹள்ளி பகுதியில் நடந்தது. இதில் சண்டைப் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த விவேக், தன் உடலில் உலோகக் கம்பியைக் கட்டியிருந்தார். அந்தக் கம்பி, பக்கத்தில் இருந்த மின்சாரக் கம்பி மீது பட்டதில் விவேக் உடலில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே பலியானார். இன்னும் சிலருக்கும் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தப் படப்பிடிப்பு முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டிருப்பதாகவும், படப்பிடிப்பில் போதிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லையென்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க சண்டைப் பயிற்சி இயக்குநர் வினோத், இயக்குநர் ஷங்கர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் என மூவரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

படத்தின் நாயகன் நடிகர் அஜய் ராவ், அந்த சண்டைக் காட்சிக்காகப் பலர் ஒரே இடத்தில் கூடியதாகவும், அந்தப் பக்கமாகச் சென்ற மின்சாரக் கம்பியைச் சுற்றி தண்ணீர் இருந்ததைத் தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்