தெலுங்குப் படத்தில் இணைந்த குஷ்பு, ராதிகா, ஊர்வசி

By செய்திப்பிரிவு

சர்வானந்த், ராஷ்மிகா நடிக்கும் 'ஆடவாள்ளு மீகு ஜோஹார்லு' தெலுங்குப் படத்தில் குஷ்பு, ராதிகா, ஊர்வசி ஆகிய மூவரும் இணைந்து நடிக்கின்றனர்.

ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் படம் 'ஆடவாள்ளு மீகு ஜோஹார்லு'. 'நேனு சைலஜா', 'சித்ராலஹரி' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கிஷோர் திருமலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

வெண்ணிலா கிஷோர், பிரதீப் ராவத், கல்யாணி நடராஜன், ரஜிதா உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் தனது தோற்றம் குறித்து கடந்த வாரம் ராஷ்மிகா பகிர்ந்திருந்தார்.

தற்போது இந்தப் படத்தில் ராதிகா, குஷ்பு, ஊர்வசி உள்ளிட்ட 80களின் முக்கிய நாயகிகள் மூவரும் இணைந்து நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் நடந்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இம்மூவரும் இணைந்துள்ளனர். படப்பிடிப்பில் மூவரும் சந்தித்து, பேசி, சேர்ந்து உண்ட புகைப்படங்களை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்