குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் அல்லு அர்ஜுன் மகள்

By செய்திப்பிரிவு

'ஷாகுந்தலம்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா.

கவிஞர் காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகம் ’அபிஜன ஷாகுந்தலம்’. இதில் ஷகுந்தலம் கதாபாத்திரத்தை வைத்து இயக்குநர் குணசேகர் புராணத் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். குணா டீம் வொர்க்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்து வருகிறது.

இதில் ஷகுந்தலமாக நடித்து வருகிறார் சமந்தா. பெரும் பொருட்செலவில் இந்தப் படம் உருவாகிறது. இது துஷ்யந்த மகாராஜாவுக்கும், விஸ்வாமித்ரர் - மேனகையின் மகளான ஷகுந்தலாவுக்கும் இடையே இருந்த காதலைச் சொல்லும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

இதுகுறித்து அல்லு அர்ஜுன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அல்லு குடும்பத்தினருக்கு இது பெருமைமிகு தருணம், நான்காம் தலைமுறையைச் சேர்ந்த அல்லு அர்ஹா, 'ஷாகுந்தலம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த அழகிய படத்தில் என் மகளை அறிமுகம் செய்யும் குணசேகருக்கும், நீலிமாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்"

இவ்வாறு அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்