அல்லு அர்ஜுனின் எதிர்பாராத அன்பளிப்பு: தேவி ஸ்ரீ பிரசாத் நன்றி

By செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நடிகர் அல்லு அர்ஜுன் பரிசளித்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது.

தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், 'புஷ்பா' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு செகந்தராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நடிகர் அல்லு அர்ஜுன் அன்பளிப்பை ஒன்றை அளித்துள்ளார். இதை தேவி ஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அல்லு அர்ஜுன் வழங்கிய ஒரு பரிசுப் பொருளை தேவி ஸ்ரீ பிரசாத் பிரிக்கிறார். அதில் ஒரு பெரிய போர்டில், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் என்று எழுதப்பட்டு சிவப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தனது பதிவில் முற்றிலும் எதிர்பாராத ஒரு அன்பளிப்பைக் கொடுத்த அல்லு அர்ஜுனுக்கு நன்றி என்று தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்