'கப்பேலா' ரீமேக்கின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ்.
முகம்மது முஸ்தபா இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'கப்பேலா'. விஷ்ணு வேணு தயாரித்துள்ள இந்தப் படத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாஸி, ரோஷன் மேத்யூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
பலரும் இந்தப் படத்தைப் பார்த்து திரைக்கதை அமைப்பு, அன்னா பென் நடிப்பு என்று கொண்டாடினார்கள். அனுராக் காஷ்யப் தொடங்கி பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
செளரி சந்திரசேகர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சித்து ஜொன்னலகட்டா, அர்ஜுன் தாஸ் இருவரும் நாயகர்களாக நடிக்கவுள்ளனர். அன்னா பென் கதாபாத்திரத்தில் நடிக்கப் பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
'கப்பேலா' ரீமேக்கின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளார் அர்ஜுன் தாஸ். 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், இந்த நேரடி தெலுங்குப் படத்தின் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஜூலை 7) நடைபெற்ற 'கப்பேலா' ரீமேக் பூஜையில் இயக்குநர் த்ரிவிக்ரம் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago