அகில் நடிக்கவுள்ள 'ஏஜெண்ட்' படத்தின் வில்லனாக நடிக்க மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நாயகனாக நடிக்கும் 'ஏஜெண்ட்' படத்தை இயக்கவுள்ளார் சுரேந்தர் ரெட்டி. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்துக்காக முழுமையாக உடலமைப்பினை மாற்றித் தயாராகியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால், படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்பை ஏஜெண்ட்டாக நடிக்கவுள்ளார் அகில். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் தயாராகவுள்ளது.
தற்போது இதில் வில்லனாக நடிக்க மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மம்மூட்டிக்கு முன்னதாக மோகன்லால், உபேந்திரா ஆகியோரை அணுகியது படக்குழு. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை எனக் கூறப்படுகிறது.
» ஓடிடியில் வெளியாகிறது சார்பட்டா பரம்பரை
» மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் மறைவு: பிரபலங்கள் இரங்கல்
இந்தப் படத்தில் அகிலுக்கு நாயகியாக புதுமுகம் சாக்ஷி வைத்தியா நடிக்கவுள்ளார். கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்புக்குப் படக்குழு தயாராகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago