ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்

By செய்திப்பிரிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பது உறுதியாகியுள்ளது.

விஜய் நடித்துவரும் 'தளபதி 65' படத்தை முதலில் இயக்கவிருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஏ.ஆர்.முருகதாஸ் விலகவே, அவருக்கு பதிலாக நெல்சன் இயக்கி வருகிறார்.

அதற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தின் நாயகன் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகவில்லை. தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படமொன்றை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது 'ஜி.ஏ.2 பிக்சர்ஸ்'. அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் உருவாக்கிய இந்த நிறுவனத்தில் இன்னொரு பங்குதாரராக இருப்பவர் பன்னி வாசு. இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அளித்துள்ள பேட்டியில், அல்லு அர்ஜுனின் அடுத்த படங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

அதில் 'புஷ்பா' படத்தைத் தொடர்ந்து, வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் உருவாகும் 'ஐகான்' படத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன். அதனைத் தொடர்ந்து 'புஷ்பா 2', ஏ.ஆர்.முருகதாஸ் படம், போயபதி சீனு, கொரட்டலா சிவா ஆகியோரது படங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பன்னி வாசு.

இவரது இந்தப் பேட்டியை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்