மீண்டும் நாயகனா? - ஜெகபதி பாபு விளக்கம்

By செய்திப்பிரிவு

மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார் என்று வெளியான செய்திக்கு ஜெகபதி பாபு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெகபதி பாபு. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் 7 படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த', விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதில் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. தற்போது வில்லனாக நடித்துவரும் ஜெகபதி பாபு, தொடக்கத்தில் பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாடி எதுவும் இல்லாமல் உள்ள புகைப்படத்தை மே 31-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். உடனடியாகப் பலரும் அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அதனால்தான் இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்று செய்திகளைப் பரப்பினார்கள்.

அந்தச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஜெகபதி பாபு கூறியிருப்பதாவது:

"முழுவதும் ஷேவ் செய்த எனது தோற்றத்தை சமூக ஊடகத்தில் பார்த்து ஆயிரக்கணக்கானோர் நான் மீண்டும் நாயகனாக நடிக்கிறேனா என்று கேட்டனர். அவர்களுக்கான பதில், இல்லை என்பதே. நான் எப்படி இருக்கிறேன் என்பதை எனக்கு நினைவுபடுத்திக் கொள்ளவே இந்த முயற்சி".

இவ்வாறு ஜெகபதி பாபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்