யூடியூப் தளத்தில் சாதனை புரிந்த 'வக்கீல் சாப்' நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

'வக்கீல் சாப்' படத்தின் நிகழ்ச்சி யூடியூப் தளத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வக்கீல் சாப்'. இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக் இது என்பது நினைவு கூரத்தக்கது. இந்தப் படத்தை போனி கபூர் மற்றும் தில் ராஜு இணைந்து தயாரித்துள்ளனர்.

மேலும், அரசியலுக்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த பவன் கல்யாண் மீண்டும் திரையுலகிற்கு இந்தப் படத்தின் மூலம் திரும்பியுள்ளார். இதனால் 'வக்கீல் சாப்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.

'வக்கீல் சாப்' படத்தை விளம்பரப்படுத்தும் விழா நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்றது. இதில் பவன் கல்யாண் உள்ளிட்ட படக்குழுவினருடன், திரையுலகினர் பலரும் கலந்து கொண்டார்கள். கரோனா அச்சுறுத்தலால் விழா அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

'வக்கீல் சாப்' படத்தின் நிகழ்ச்சியை, தயாரிப்பாளர் தில் ராஜுவின் யூடியூப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். இந்த நிகழ்வு தான் யூடியூப்பில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. என்னவென்றால் ஒரே சமயத்தில் 1,31,138 பேர் நேரடி நிகழ்வைக் கண்டு ரசித்தார்கள். ஒரு யூடியூப் பக்கத்தில் ஒரே சமயத்தில் இவ்வளவு பேர் கண்டுகளித்தது மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

மேலும், படத்துக்கு இருக்கும் இந்த மாபெரும் எதிர்பார்ப்பால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்