'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, 'விக்ரம்' படத்தைத் தொடங்கவுள்ளார் கமல்.
இந்தப் படத்துக்கான நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு இடங்கள் தேர்வு உள்ளிட்டவற்றை கவனித்து வரும் போது தான், லோகேஷ் கனகராஜுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது ஓய்வில் இருப்பவர் மீண்டும் பணிகளை விரைவில் துவங்குவார் எனக் கூறப்படுகிறது.
» கரோனா தொற்று அதிகரிப்பு: 'சூர்யவன்ஷி' வெளியீடு ஒத்திவைப்பு
» 'ராக்கெட்ரி' காட்சிகளைப் பாராட்டிய பிரதமர் மோடி: மாதவன் பகிர்வு
'விக்ரம்' படத்தை முடித்துவிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் எனச் சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
தற்போது இந்தப் படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான சந்திப்பு முடிந்துவிட்டதாகவும், ஆனால் அறிவிப்பு வருவதற்கு சில காலம் ஆகும் எனத் தெரிகிறது.
'விக்ரம்', 'பிரபாஸ் நடிக்கவுள்ள படம்' ஆகிய இரண்டு படங்களை முடித்துவிட்டுத் தான் விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago