நிவேதா தாமஸுக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

முன்னணி நடிகையான நிவேதா தாமஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா தாமஸ். தமிழில் விஜய்யுடன் 'ஜில்லா', கமலுடன் 'பாபநாசம்', ரஜினியுடன் 'தர்பார்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 'ஜென்டில்மேன்', 'நின்னு கோரி', 'ஜெய் லவ குசா' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது பவன் கல்யாண் நடித்துள்ள 'பிங்க்' ரீமேக்கான 'வக்கீல் சாப்' படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ். இந்தப் படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளில் இயக்குநர் ஸ்ரீராம் வேணு, அஞ்சலி உள்ளிட்டோருடன் நிவேதா தாமஸ் பங்கேற்றார்.

இந்நிலையில், நிவேதா தாமஸுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ விதிமுறைகளையும் பின்பற்றி என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என எதிர்பார்க்கிறேன்.

அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக என்னைச் சிறப்பாகக் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கவும்".

இவ்வாறு நிவேதா தாமஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்