டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'மின்னல் முரளி' ஓணம் பண்டிகை வெளியீடாக ஆகஸ்டு 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மாயநதி’, ‘ஃபாரன்ஸீக்’, ‘தீவண்டி’, ‘வைரஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டொவினோ தாமஸ். நிவின் பாலி, துல்கர் சல்மான் வரிசையில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர். ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் ‘குஞ்சிராமாயணம்’, ‘கோதா’ ஆகிய படங்களை இயக்கிய பாசில் ஜோசப் இயக்கும் அடுத்த படமான ‘மின்னல் முரளி’ படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். மலையாளத் திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்று கூறப்படும் 'மின்னல் முரளி' இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. அஜூ வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், தமிழ் நடிகர் குரு சோமசுந்தரம் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
தற்போது இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் நாளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மோஷன் போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த மோஷன் போஸ்டரில் சூப்பர் ஹீரோ உடையில் இருக்கும் டொவினோ தாமஸ், தன் முகத்தை சிவப்புத் துணியால் மறைத்துள்ளார். சாதரணமான ஒரு நபருக்கு அதிசய சக்திகள் கிடைத்தால் என்ன ஆகும் என்பதே இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago