லிங்குசாமி படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

லிங்குசாமி இயக்கவுள்ள தெலுங்குப் படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார் லிங்குசாமி. கரோனா அச்சுறுத்தலால் அந்தப் படத்தின் பணிகள் தாமதமாகி வந்தன. தற்போது அந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் 'உப்பெனா' படத்தின் மூலம் முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கியுள்ள கீர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரியவுள்ளார். சென்னையில் தேவி ஸ்ரீபிரசாத் நடுவராகக் கலந்துகொள்ளும் 'ராக்ஸ்டார்' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொண்ட லிங்குசாமி பேசும்போது, தனது படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரியவுள்ளதை உறுதிப்படுத்தினார்.

இந்தப் படத்தில்தான் முதன்முறையாக லிங்குசாமி - தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்