மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'மரைக்காயர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, முகேஷ் ,நெடுமுடி வேணு, பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா என பெரிய நட்சத்திர பட்டாளமே மோகன்லாலுடன் நடித்துள்ளது.
இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் சரியான வெளியீட்டுத் தேதிக்காக காத்திருந்தது படக்குழு. தற்போது மே 13-ம் தேதி 'மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்' படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ஐயப்பன் நாயர், இசையமைப்பாளராக ரோனி நபேல் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தைத் தமிழில் தாணு வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago