25 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள படத்தில் அரவிந்த் சாமி

By செய்திப்பிரிவு

25 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரடி மலையாளப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்த் சாமி.

'கள்ளபார்ட்', 'சதுரங்க வேட்டை 2', 'வணங்காமுடி', 'நரகாசூரன்', 'தலைவி' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அரவிந்த் சாமி. இதில் பல படங்கள் அனைத்து பணிகளும் முடிவுற்று வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. விரைவில் வெளியீடு குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்த் சாமி. 'ஒட்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஞ்சகோ போபன் உடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தை 'தீவண்டி' இயக்குநர் டி.பி.ஃபெலினி இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு சஜீவ் கதை எழுதியுள்ளார். ஹாசிப் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மும்பை, கோவா, மங்களூர் மற்றும் உடுப்பி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

அரவிந்த் சாமி நடிப்பதால் படக்குழுவினர் இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாக்கவுள்ளனர். ஜூலையில் இந்தப் படம் திரைக்கு வரும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE