'ராதே ஷ்யாம்' டீஸருடன் படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை இத்தாலி நாட்டில் படமாக்கியுள்ளது படக்குழு. மேலும், சில காட்சிகளை ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துப் படமாக்கினார்கள். கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
முழுக்கக் காதலை மையப்படுத்தி 'ராதே ஷ்யாம்' திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு, இதன் டீஸரை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், இதுவரை 'ராதே ஷ்யாம்' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமலேயே இருந்தது படக்குழு. தற்போது படத்தின் டீஸருடன் ஜூலை 30-ம் தேதி வெளியீடு என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago