நானி நடிப்பில் உருவாகி வரும் 'டக் ஜெகதீஷ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
நானி - சிவா நிர்வானா கூட்டணியில் வெளியான படம் 'நின்னு கோரி'. நிவேதா தாமஸ், ஆதி உள்ளிட்ட பலர் நானியுடன் நடித்துள்ள இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'தள்ளிப் போகாதே' திரைப்படம் இந்தப் படத்தின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
'நின்னு கோரி' படத்தைத் தொடர்ந்து சிவா நிர்வானா இயக்கத்தில் வெளியான 'மஜிலி' படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது மீண்டும் நானி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் சிவா நிர்வானா.
இதில் ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நானியுடன் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'டக் ஜெகதீஷ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று (டிசம்பர் 25) வெளியிட்டுள்ளது படக்குழு.
» ரஜினி மருத்துவமனையில் அனுமதி: ரத்த அழுத்தப் பிரச்சினை எதிரொலி
» முத்தையா - விக்ரம் பிரபு பட வெளியீட்டில் மாற்றம்: சன் பிக்சர்ஸ் முடிவு
சாஹூ மற்றும் ஹரிஷ் இருவரும் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் மாதம் 'டக் ஜெகதீஷ்' திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago