தனி ஒருவன் ரீமேக்கில் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் மாதவன்?

By ஸ்கிரீனன்

ராம் சரண் நடிக்கவிருக்கும் 'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கில் அரவிந்த்சாமி பாத்திரத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தனி ஒருவன்'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக்காக இருக்கிறது.

'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்க, சுரேந்தர் ரெட்டி இயக்குவது முடிவாகி இருக்கிறது. ரீமேக் படப்பிடிப்புக்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மீண்டும் அதே பாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அரவிந்த்சாமி அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரவிந்த்சாமி வேடத்தில் தெலுங்கு படத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ராம்சரண் 'புரூஸ்லீ' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

தமிழில் அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமாகும் முன்னர் அந்த வேடத்தில் நடிக்க மாதவனிடம் தான் மோகன்ராஜா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்