'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் - ராணா டகுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்த இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சித்தாரா என்டர்டையின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பிஜு மேனன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க பவன் கல்யாண் ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அதில் ராணா டகுபதி நடிக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கை சாகர் கே.சந்திரா இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக பிரசாத் முரேலா, இசையமைப்பாளராக தமன், எடிட்டராக நவீன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago