தெலுங்கில் உருவாகும் 'லூசிஃபர்' ரீமேக்கை மோகன் ராஜா இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிஃபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராம் சரண். மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது. இதன் ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டதிலிருந்து இயக்குநர் சுஜித், வி.வி.விநாயக் உள்ளிட்டோர் இயக்கவுள்ளனர் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால், எதுவுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார் மோகன் ராஜா. அப்போதே, 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகி வந்தது. இப்போது அது உறுதியாகியுள்ளது.
2001-ம் ஆண்டு 'ஹனுமன் ஜங்ஷன்' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகத்தான் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. அதற்குப் பிறகு எந்தவொரு தெலுங்குப் படத்தையும் மோகன் ராஜா இயக்கவில்லை. சுமார் 19 ஆண்டுகள் கழித்து, 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 'லூசிஃபர்' படம் அதிகமான கதாபாத்திரங்களைக் கொண்டது என்பதால், நடிகர்கள் தேர்வில் மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறது படக்குழு. ஜனவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago