'லூசிஃபர்' ரீமேக்: மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி?

By செய்திப்பிரிவு

'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிஃபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராம்சரண். மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது. இதன் ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டதிலிருந்து இயக்குநர் சுஜித், வி.வி.விநாயக் எனப் பல இயக்குநர்கள் பணிபுரிந்துவிட்டார்கள். ஆனால், 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கின் இயக்குநர் குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.

இந்நிலையில், 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்க மோகன் ராஜாவிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கை இயக்க முதலில் மோகன் ராஜாவிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தினார் ராம்சரண். ஆனால், அந்தச் சமயத்தில் 'வேலைக்காரன்' படத்தை அவர் இயக்கிக் கொண்டிருந்ததால் அது முடியாமல் போய்விட்டது.

தற்போது 'லூசிஃபர்' ரீமேக்கையும் விட வேண்டாம் என்று மோகன் ராஜா ஆர்வம் காட்டி வருகிறார். விரைவில் இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை ராம்சரண் மற்றும் என்.வி.பிரசாத் இணைந்து தயாரிக்கவுள்ளனர். 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கை முடித்துவிட்டுதான் 'லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்கிற்குத் தேதிகள் ஒதுக்கவுள்ளார் சிரஞ்சீவி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

7 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்