சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சாரியா' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
'சைரா: நரசிம்மா ரெட்டி' படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார் சிரஞ்சீவி. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுத் தொடங்கப்பட்டது.
தெலுங்குத் திரையுலகிலேயே இந்த அளவுக்குப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டதில்லை எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், ஒரு ஊரையே அரங்கமாக அமைத்திருக்கிறார்கள். அதில்தான் படத்தின் 80% படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் அரங்கில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், 'ஆச்சாரியா' படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. அனைத்து நடிகர்களின் தேதிகளும் கிடைத்துவிட்டதால், நவம்பர் 9-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் 'ஆச்சாரியா' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
» 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தை மேற்கோள் காட்டினார்கள்: சரத்குமாரருக்கு சோனு சூட் பதில்
சுமார் ஒரு மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு கோடை விடுமுறை வெளியீடாக 'ஆச்சாரியா' இருக்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
'ஆச்சாரியா' படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர் பங்கேற்கும் படப்பிடிப்பாக 'ஆச்சாரியா' இருக்கும் எனத் தெரிகிறது. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago